கடவுள் இருக்கான் குமாரு.. இடித்து விழுந்த 160 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. நொடியில் உயிர் தப்பிய சிறார்கள்.!
கடவுள் இருக்கான் குமாரு.. இடித்து விழுந்த 160 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. நொடியில் உயிர் தப்பிய சிறார்கள்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டம், சதார் பஜார் காவல் எல்லைக்குட்பட்ட, தோல்கி முஹல்லா பகுதியில் பகுதியில் ௧௬௦ ஆண்டுகால பழமையான வீடு ஒன்று இருக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே பெய்த தொடர் மழையால் கட்டிடம் வலுவிழந்து காணப்பட்டதாக தெரியவருகிறது. சம்பவத்தன்று இந்த வீட்டை கடந்து பெண்கள், இரண்டு சிறார்கள் கடந்து சென்றனர்.
இதையும் படிங்க: மகளை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்ட தாய்; காவியக் காதலால் அம்மாவை தீர்த்துக்கட்டிய 17 வயது மகள்.!
இவர்கள் தங்களின் வீட்டினை கடந்து சென்ற சில நொடிகளில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து கீழே விழுந்தது. சில நொடிகள் சிறார்கள் தாமதம் செய்திருந்தாலும், அவர்களின் உயிர் பலியாகி இருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சிறார்களின் உயிர் அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: மகளை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய தந்தை; தவறு செய்ததால் ஆத்திரம் தலைக்கேறி அதிர்ச்சி செயல்.!