முதலிரவு அறையில் காத்திருந்த மணமகனுக்கு அதிர்ச்சி கொடுத்த புதுமணப்பெண்..!
முதலிரவு அறையில் காத்திருந்த மணமகனுக்கு அதிர்ச்சி கொடுத்த புதுமணப்பெண்..!
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் பாதல். இவர் நிக்கி என்ற பெண்ணுடன் கடந்த மார்ச் 1 ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
அதனைத்தொடர்ந்து, முதலிரவுக்காக பாதல் அறையில் தயாராக இருந்துள்ளார். பெண்ணும் அறைக்கு வருவார் என காத்திருந்த நிலையில், அவர் மாயமாகி இருக்கிறார்.
ஆசையாக காத்திருந்த மணமகனுக்கு அதிர்ச்சி கொடுத்த மணப்பெண்:
இதனையடுத்து, வீட்டில் சோதனையிட்டபோது பணம் மற்றும் நகையும் மாயமாகவே, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற அதிகாரிகள் தப்பியோடிய பெண்ணை கைது செய்தனர். தற்போது அவரிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில் திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமாகுவதை அவர் வாடிக்கையாக கொண்டது தெரியவந்தது.