துப்பாக்கி முனையில் திருட்டு முயற்சி.. ஊரே கூடி திருடனை கொலை செய்த பயங்கரம்.. திடுக்கிட வைக்கும் காட்சிகள்.!
துப்பாக்கி முனையில் திருட்டு முயற்சி.. ஊரே கூடி திருடனை கொலை செய்த பயங்கரம்.. திடுக்கிட வைக்கும் காட்சிகள்.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் மாவட்டம், நவாடா, கஃலஹிரி பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் வீட்டில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 2 பேர் கும்பல் துப்பாக்கி முனையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது.
அப்போது, குடும்பத்தினர் திடுக்கிட்டு விழித்து திருடர்களை பிடித்துக்கொண்ட நிலையில், மொத்தமாக ஊர் மக்களும் திரண்டுவிட்டனர். திருடர்களின் கால்களில் கயிறை வைத்து கட்டித்தூக்கி சரமாரியாக தாக்கி இருக்கின்றனர்.
ஒருவர் கொலை
இந்த சம்பவம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்கள் சல்மான், ரஷீத் என அடையாளம் காணப்பட்டனர்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறில் வெறிச்செயல்; மனைவி வெட்டிக்கொலை.!
இவர்களில் படுகாயமடைந்து இருந்த சல்மான் பரிதாபமாக உயிரிழந்தார். ரஷீத் படுகாயத்துடன் மீரட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: நண்பனின் மனைவியிடம் அத்துமீறல்; உண்மை அறிந்து கொலைப்பழிக்கு ஆளான விபரீதம்.. நட்பு துரோகமானதால் சோகம்.!