ஆன்மீக சுற்றுலாவில் திருப்பம்.. நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்.. அச்சம்.!
ஆன்மீக சுற்றுலாவில் திருப்பம்.. நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்.. அச்சம்.!
உத்திரகாண்ட் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே திடீர் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து உத்திரகாண்டில் இருக்கும் ஆதி கைலாஷுக்கு, கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து; 8 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!
அங்கு தற்போது நிலச்சரிவு ஏற்பட்டு வரும் காரணத்தால், அவர்கள் கீழே இறங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கேயே சிக்கி தவித்து வருகின்றனர்.
தங்களை மாநில அரசிடம் சொல்லி, மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரிக்கை வைக்குமாறு உறவினர்களுக்கு தொடர்பு கொண்டும் தெரிவித்து இருந்தனர்.
இதனையடுத்து, அவர்கள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், சுற்றுலா பயணிகள் அனைவரும் பத்திரமாக இருந்தாலும், கீழே இறங்க இயலாததால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி வகுப்பறையில் நடந்த பகீர் சம்பவம்; பாம்பு தீண்டி ஆசிரியை மருத்துவமனையில் அனுமதி.!