×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டெல்லியில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமை சம்பவங்கள்.. அதிர்ச்சி தகவல்..!

டெல்லியில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமை சம்பவங்கள்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!

Advertisement

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 % அதிகரித்துள்ளது. 

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 %  அதிகரித்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து டெல்லி காவல்துறையின் தரவுகள் அடிப்படையில் இந்த வருடம் ஜனவரி தொடக்கம் முதல் ஜூலை 15-ஆம் தேதி வரையில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு;-

கடந்த வருடம் ஜனவரி ஒன்று முதல் ஜூலை 15 வரை ஒப்பிடும்போது இந்த வருடம் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவிகிதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. டெல்லியில் தினமும் சராசரியாக ஆறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகிறது. மேலும் பெண்கள் மீது நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் 19 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.

கணவர் மற்றும் கணவரின் குடும்ப உறுப்பினர்கள் என்று பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நடப்பு வருடம் ஜனவரி ஒன்று முதல் ஜூலை 15 வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக டெல்லியில் மொத்தம் 7 ஆயிரத்து 887 வழக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் பதிவான 6 ஆயிரத்து 747 வழக்குகளை விட அதிகமாகும். இந்த வருடம் ஜூலை 15 வரை டெல்லியில் 1,100 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளது. 

இது கடந்த வருடம் இந்த காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 1,033 பாலியல் வன்கொடுமை வழக்குகளை விட அதிகமாகும். கணவர், கணவரின் குடும்ப உறுப்பினர்கள் என பெண்கள் மீது குடும்ப வன்முறையில் ஈடுபடுவது தொடர்பாக இரண்டாயிரத்து 704 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் பதிவான 2096 விட சற்று குறைவாகும். வரதட்சனை கொடுமை தொடர்பாக 69 மரணங்கள் நடைபெற்று இருப்பதாகவும் டெல்லி காவல்துறை தரவுகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #delhi #Incidents of violence #Against women #Average six rapes #Reported daily
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story