ஐ.நா சபையின் ரஷிய கண்டன தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா, சீனா, அமீரகம்..!
ஐ.நா சபையின் ரஷிய கண்டன தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா, சீனா, அமீரகம்..!
ரஷியா உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து சென்றுள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின்படி, ரஷியா நிபந்தனையின்றி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்குள் இருக்கும் அதன் படைகளை ரஷியாவிற்கு திரும்ப வரச்சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த தீர்மானம் அமெரிக்கா, போலந்து, இத்தாலி, ஜெர்மனி மற்றும் நியூசிலாந்து உட்பட பல நாடுகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பு நடத்த கொண்டு வரப்பட்ட நிலையில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தது. இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.
இந்த தீர்மானத்தினை ரஷியா வீட்டோ அதிகாரம் கொண்டு முறியடித்த நிலையில், ரஷியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா சபையில் தோல்வியை தழுவியது. மேலும், பேச்சுவார்த்தை நடத்துவதை வலியுறுத்தி இந்தியா வாக்கெடுப்பது புறக்கணித்ததாக ஐ.நா இந்திய அதிகாரி தெரிவித்தார்.