Breaking: மார்ச் 31 வரை அணைத்து ரயில்சேவைகளும் நிறுத்தம்..! ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு.!
India all trains stopped up to march 31st
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸை கட்டுப்படுத்த இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை அடுத்து இன்று நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதனால் வைரஸ் தாக்கம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்களை மூட அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ரயில் பயணிகள் மூலம் கொரோனா பரவு வாய்ப்புள்ளதால் வரும் மார்ச் 31 வரை அணைத்து ரயில் சேவைகளையும் நிறுத்துவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. சரக்கு ரயில்களை தவிர மற்ற அணைத்து ரயில் சேவைகளும் வரும் மார்ச் 31 வரை நிறுத்தப்படுகிறது.