அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக தேர்வு.. தமிழர்களே கொண்டாட்டம்.!
அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக தேர்வு.. தமிழர்களே கொண்டாட்டம்.!
இந்தியாவில் இருக்கும் உற்பத்தி தொழிற்சாலைகளின் மாநில வாரியான பட்டியல் தொடர்பான ஆய்வு நடந்து வந்தது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலைகள் கொண்ட முதல் மாநிலத்தில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் 38,837 உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
அதனைத்தொடர்ந்து, குஜராத்தில் 28,479 தொழிற்சாலைகளும், மஹாராஷ்டிராவில் 25,610 தொழிற்சாலைகளும், ஆந்திராவில் 16,924 தொழிற்சாலைகளும், உத்திரபிரதேசத்தில் 16,184 தொழிற்சாலைகளும் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே அதிகளவு தொழிற்சாலைகள் இருப்பினும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வேலைவாய்பின்மை 2 மடங்காக அதிகரித்து இருந்தது. தற்போது அது படிப்படியாக சரியாகி வருகிறது.