நான்கு மாதத்தில் பல மடங்காக உயர்ந்த கொரோனா பரிசோதனை மையங்கள்.. வெளியான புதிய புள்ளிவிவரம்!
India covid lab details
இந்தியாவில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தில் இருந்ததை விட தற்போது பல மடங்காக அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரேயொரு கொரோனா பரிசோதனை மையம் மட்டுமே செயல்பட்டது. அப்போது சோதனை முடிவுகள் வெளியாக மிகவும் தாமதமானது.
பின்னர் மார்ச் மாத இறுதிக்குள் 160 கொரோனா பரிசோதனை மையங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது இந்த எண்ணிக்கை 1307 ஆக உயர்ந்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இதில் 905 அரசு ஆய்வகங்களும் 402 தனியார் ஆய்வகங்களும் அடங்கும். நேற்று ஜூலை 25 ஆம் தேதி மட்டும் இந்தியாவில் 4,42,263 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.