சவாலுக்கு தயாரா? வித்தியாசமான முறையில் நிதி திரட்டும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி!
India hockey team challenge to collect refund money
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் தற்போது 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 480 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேலை எதுவுமின்றி கூலித் தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து பெருமளவில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் திரைப் பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் என பலரும் நிதியுதவி அளித்து உதவி வருகின்றனர்.
இந்நிலையில் ஏழை தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவும்வகையில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியினர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது 18 நாட்கள் உடற்பயிற்சி குறித்த வெவ்வேறு விதமான சவால்களை ஆன்லைன் மூலம் விடுத்து அதனை செய்து காட்டும்படி ரசிகர்ளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த சவாலை குறைந்தபட்சம் ரூ.100 செலுத்தி போட்டியில் பங்கேற்கலாம். இந்த உடற்பயிற்சி சவால் மூலம் திரட்டப்படும் நிதி டெல்லியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான உதய் பவுண்டேசனிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ஹாக்கி அணியினர், வீட்டில் இருப்பவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுடன், ஏழை மக்களும் பயன்பெறுவர் என தெரிவித்துள்ளனர்.