பாகிஸ்தானின் அத்துமீறல்! இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்!
indian army attacks on terrorist camps
பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கியதை தொடர்ந்து அங்கு வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டு அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்துவருகிறது.
இந்நிலையில் காஷ்மீரின் குபுவாரா மாவட்டத்தின் எல்லையில் தங்தார் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தியது. இதில், இரண்டு இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.