பொறுமையை சோதித்து தவறிழைக்க வேண்டாம் - சீனா, பாகிஸ்தானுக்கு எம்.எம் நரவானே எச்சரிக்கை .!
பொறுமையை சோதித்து தவறிழைக்க வேண்டாம் - சீனா, பாகிஸ்தானுக்கு எம்.எம் நரவானே எச்சரிக்கை .!
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், கடந்த 1949 ஆம் வருடம் ஜனவரி 15 ஆம் தேதி முதல் இந்திய இராணுவ தளபதியாக ஜெனரல் கே.எம் கரியப்பா பொறுப்பேற்றார். இந்த தினத்தினை நினைவுகூரும் பொருட்டு, வருடம்தோறும் ஜன. 15 ஆம் தேதி இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், இராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செய்யப்படுகிறது. டெல்லியில் இராணுவ வீரர்களிடையே இந்திய இராணுவ தளபதி எம்.எம். நரவானே பேசுகையில், "இந்தியாவிற்குள் ஊடுருவும் பொருட்டு எல்லையில் 400 பயங்கரவாதிகள் காத்துகொண்டு இருக்கின்றனர்.
எல்லையை பொறுத்த வரையில் பாதுகாப்பு பணிகள் சிறப்பாக நடந்து வந்தாலும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து வருவதை விடவில்லை. என்கவுண்டரில் 144 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் சீனாவுடன் ஏற்பட்ட பதற்றத்திற்கு பின்னர் 14 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தது. தற்போதைய நிலையை மாற்ற முயற்சித்தால், அவர்களை வெற்றிபெற விடமாட்டோம். எங்களின் பொறுமை தன்னம்பிக்கையின் அடையாளம். அதனை சோதிக்க வேண்டாம். எங்களின் பொறுமையை சோதித்து பார்க்கும் தவறினை யாரும் மேற்கொள்ள வேண்டாம்" என்று பேசினார்.