தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரரின் உடல்.! முழு இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு.!

38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரரின் உடல்.! முழு இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு.!

Indian Army has found the body of a soldier who went missing after 38 years Advertisement

சியாச்சினில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடல் 38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியை சேர்ந்த சந்திர சேகர் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1984ம் ஆண்டில் சியாச்சினில் 16 ஆயிரம் அடி உயரத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்த பகுதியை மீட்கும் பணியான "ஆபரேஷன் மேக்தூத்" குழுவில் சந்திரசேகர் அங்கம் வகித்தார்.

இதையடுத்து அந்த குழுவில் ஈடுபட்ட அனைவரும் சியாச்சின் பனிப்பிரதேசத்தில் பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 18 வீரர்கள் பலியாகினர். இதில் சந்திரசேகர் இறந்தார். இதில் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் சந்திரசேகர் உள்பட 4 பேரின் உடல்கள் மீட்கப்படவில்லை. ஆனாலும் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வந்தது.

Army man

இந்தநிலையில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர் ஒருவரின் உடல் 38 ஆண்டுகளுக்குப் பிறகு சியாச்சினில் உள்ள பழைய பதுங்கு குழியில் கண்டெடுக்கப்பட்டது. அது சந்திரசேகர்  உடல் என ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டது.

இந்தநிலையில், 38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட வீரரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபகுதியில், மற்றொரு வீரரின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் அவரது அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Army man #after 38 years
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story