நியூசிலாந்தில் இறந்த நாயின் அஸ்தியை இந்தியாவிற்கு கொண்டு வந்த நபர்! நெகிழ்ச்சி சம்பவம்!
indian bring dog asthi from england
நியூசிலாந்தில் வாழும் இந்தியர் ஒருவர், உயிரிழந்த தனது வளர்ப்பு நாயின் அஸ்தியை இந்தியா எடுத்து வந்து கங்கை நதியில் கரைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தைச் சேர்ந்த பிரமோத் குமார் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக நியூசிலாந்தில் வசித்து வருகிறார். இவர் 10 ஆண்டுகளாக தன்னுடன் லைக்கான் என்கிற செல்ல நாயினை பாசமாக வளர்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில், சமீபத்தில் தன்னுடைய செல்லப்பிராணி இறந்ததும், இந்து பாரம்பரியத்தின் படி தகனம் செய்ய முடிவு செய்துள்ளார் பிரமோத் குமார். அதன்படி லைக்கானின் அஸ்தியை நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்து கங்கை நதியில் கரைத்து இறுதிச்சடங்குகளை நடத்தியுள்ளார்.
உயிரிழந்த தனது நாயின் அஸ்தியை நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்து கங்கையில் கரைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.