எங்களை சீனாவுக்கு கூட்டிட்டு போங்க - இந்திய சீன மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போர்க்கொடி.!
எங்களை சீனாவுக்கு கூட்டிட்டு போங்க - இந்திய சீன மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போர்க்கொடி.!
மருத்துவப்படிப்பை ஆப்லைனில் படிப்பது தான் சிறந்தது, எங்களை மீண்டும் சீனாவுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனாவில் மருத்துவம் பயில சென்று கொரோனாவால் தாயகம் வந்த இந்திய மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, சர்வதேச அளவில் படிப்பு வேலைகளுக்காக சென்றவர்கள் தாயகம் வந்தனர். இவர்கள் மீண்டும் படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடுகள் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கொரோனா விவகாரத்தில் சீனா இன்றளவும் மர்மமான நாடாக இருந்து வருகிறது. அங்கு மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் மீண்டும் இந்தியா வந்து சேர்ந்தனர். இந்த நிலையில், இந்தியா - சீனா இடையே லடாக் பகுதியில் ஏற்பட்ட எல்லை பிரச்சனை 2020 ஆம் வருடம் பெரும் மோதலுக்கு சென்றது.
40 இந்திய வீரர்கள் சீன படைகளால் கொல்லப்பட்ட நிலையில், இந்திய இராணுவம் தந்த பதிலடி சீன தரப்பில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. ஆனால், எத்தனை சீன வீரர்கள் உயிரிழந்தார்கள் என்ற தகவல் இன்று வரை மர்மமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இந்தியா வந்த நிலையில், எல்லை பிரச்சனை தீர்க்காமல் எந்த உறவு முன்னேற்றமும் இல்லை என்ற வகையில் இந்திய அரசு பதில் தெரிவித்ததால் அவர் அமைதியாக புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில், சீனாவிற்கு சென்று மருத்துவம் பயின்று வந்த இந்திய மருத்துவக்கல்லூரி மாணவர்கள், மீண்டும் நாங்கள் சீனா செல்ல வழிவகை செய்ய வேண்டும். உலகளவில் நடக்கும் பிரச்சனையை வைத்து உக்ரைன் இந்திய மாணவர்களை கருத்தில் கொண்டவர்கள், எங்களை கண்டுகொள்ளவில்லை. சீனா செல்வதற்கு எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடந்தாலும், மருத்துவத்துறையில் அது பெரும் எதிர்கால சிக்கலை வழிவகுக்கும். எங்களை சீனா அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ட்விட்டர் #SaveIndianStudentsOfChina என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.