அமெரிக்காவில் நீதிபதியாக இந்தியர் அருண் சுப்பிரமணியன் நியமனம்.!
அமெரிக்காவில் நீதிபதியாக இந்தியர் அருண் சுப்பிரமணியன் நியமனம்.!
நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுப்ரமணியனை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பரிந்துரைத்துள்ளார். செவ்வாயன்று இது தொடர்பான தகவல் மற்ற நீதித்துறை நியமனங்களுடன் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது.
இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதி என்ற சிறப்பை அருண் சுப்பிரமணியன் பெறுவார். 2006 முதல் 2007-ம் ஆண்டு வரை அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரூத்பேடர் கின்ஸ்பர்க்கின் சட்ட எழுத்தராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமெரிக்க மாவட்ட நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள அருண் சுப்பிரமணியனுக்கு தேசிய ஆசிய பசிபிக் அமெரிக்க பார் அசோசியேஷன் வாழ்த்து தெரிவித்துள்ளது.