கிராமப்புற மக்களை குறிவைத்து போலி அஞ்சல் கணக்குகள்.. இந்திய அஞ்சலக வங்கி பரபரப்பு எச்சரிக்கை..!
கிராமப்புற மக்களை குறிவைத்து போலி அஞ்சல் கணக்குகள்.. இந்திய அஞ்சலக வங்கி பரபரப்பு எச்சரிக்கை..!
இன்றளவில் இந்தியாவில் உள்ள மக்கள் அஞ்சலக கணக்குகளின் அருமையை உணர்ந்து, பலரும் அதன்பக்கம் திரும்பி வருகின்றனர். இந்த அஞ்சலக கணக்குகளில் கிராமப்புற & கல்வியறிவு இல்லாத மக்களின் பெயர்களில், அவர்களுக்கே தெரியாமல் கணக்குகளை தொடங்கி மோசடி செய்யும் சம்பவமும் நடந்து வந்துள்ளது.
இவ்வாறான செயல்களை கண்டறிந்துள்ள இந்திய அஞ்சலக வங்கி, வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களின் தனிப்பட்ட விபரங்களை முன்பின் தெரியாத நபர்களுக்கு தெரிவிக்க கூடாது எனவும், தங்களுக்கு நன்கு தெரிந்தவர் ஆவணங்களில் கையெழுத்து, போட்டோ போன்றதை கேட்டால் கவனத்துடன் செயல்படுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலியான கணக்குகளை மக்களுக்கே தெரியாமல் உருவாக்கும் நபர்கள், அதனை வைத்து பல இணைய குற்றங்களில் ஈடுபடவும், சட்டவிரோத பணபரிவர்தனைகளை மேற்கொள்ளவும் இயலும் என்பதால் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மூன்றாம் நபருக்கு செல்போன் நம்பர், ஓ.டி.பி போன்றவற்றை தர கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.