மோடியின் ட்விட்டர் அக்கவுண்டில் கைவைத்த ஹேக்கர்கள்.. செய்த பரபரப்பு காரியம்.!!
மோடியின் ட்விட்டர் அக்கவுண்டில் கைவைத்த ஹேக்கர்கள்.. செய்த பரபரப்பு காரியம்.!!
பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டு, பிட்காயின் ஆதரவு பதிவுகள் பதிவிடப்பட்டது. பின்னர் அரசு அதனை மீட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தை 73.4 மில்லியன் மக்கள் இந்தியாவில் இருந்தும், உலகெங்கிலும் இருந்து பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தை ஹேக்கிங் செய்த மர்ம நபர்கள், பிட் காயினுக்கு ஆதரவாக மோடி தெரிவித்துள்ளது போல பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியா பிட்காயினை வரவேற்கிறது என்பது போலவும் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுகளை கண்ட அரசுத்துறை அதிகாரிகள், உடனடியாக உயர்தொழில்நுட்பம் மூலமாக ஹேக்கிங் செயலை தவிடுபிடியாக்கி, ட்விட்டர் கணக்கை மீட்டுள்ளனர். மேலும், பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டுவிட்டது. ஹேக்கர் பதிவிட்டதும் அழிக்கப்பட்டுவிட்டது. அதுகுறித்த தகவலை யாரும் பகிர வேண்டாம் எனவும் பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.