45,000 மதிப்பிலான மொபைல் போனை திருடி சென்ற நபர்...சில நாள் கழித்து திருடன் செய்த சுவாரஸ்ய சம்பவம்.!
india/thief-returns-45000-rs-phone-to-owner-as-he-fails-to-operate
மேற்குவங்க மாநிலம், ஜமால்பூர் என்னும் பகுதியில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் ஒரு நபர் தனது 45,000 மதிப்பிலான மொபைல் போன் ஒன்றை மறதியாக விட்டு சென்றுள்ளார். சிறுது நேரம் கழித்து தனது மொபைல் போன் காணாததால் மீண்டும் ஸ்வீட் கடைக்கு வந்து சோதனை செய்துள்ளார்.
ஆனால் அங்கு வந்து அந்த நபர் பார்த்த போது அங்கு மொபைல் போன் இல்லை. உடனே அந்த நபர் தனது நம்பருக்கு போன் செய்துள்ளார். அப்போது சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. அதனையடுத்து அந்த நபர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்கள் கழித்து மீண்டும் தனது நம்பருக்கு போன் செய்த போது திருடிய நபர் அழைப்பை எடுத்து பேசியுள்ளார். அப்போது அந்த நபர் சார் என்னை மன்னித்து விடுங்கள்,எனக்கு இந்த மொபைல் போனை சரிவர பயன்படுத்த தெரியவில்லை. உங்களிடமே திருப்பி தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
அதனை கேட்டு ஆச்சர்யத்தில் உறைந்த மொபைல் போன் உரிமையாளர் மறுநாள் போலீசாரின் உதவியுடன் சென்று மொபைல் போனை வாங்கியுள்ளார். மேலும், திருடிய பொருளை திருப்பி அளித்ததால் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.