வைரஸை பரப்ப அழைப்பு விடுத்த நபரை அதிரடியாக பணிநீக்கம் செய்த இன்போசிஸ் நிறுவனம்!
Infosys has terminated the service of employee qho called to spread virus
பேஸ்புக்கில் "நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெளியில் சென்று வைரஸை பரப்புவோம் வாருங்கள்" என பதிவிட்ட முஜீப் முகம்மது என்பவரை பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் பணிநீக்கம் செய்துள்ளது.
முஜீப் முகம்மது என்ற பெயர் கொண்ட பேஸ்புக் பக்கத்தில் வைரஸை பரப்புவோம் வாருங்கள் என்று கொரோனா வைரஸை பரப்பும் நோக்கில் அந்த நபர் பதிவிட்டுள்ளார். உலகமே அஞ்சமடைந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவினை பார்த்ததும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சிலர் அதனை ஸ்கீரின் ஸாட் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். சிலர் அவரது பெயரை மற்ற சமூக வலைத்தளங்களில் தேடி அந்த நபர் பெங்களூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்றும் கண்டறிந்தனர்.
தொடர்ந்து எழுந்த புகாரின் அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனம் அந்த நபர் குறித்து விசாரணை செய்து ஒருவேளை எங்கள் நிறுவனத்தின் பணியாளர் இப்படி ஒரு செயலை செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது.
அதனைத் தொடர்ந்து இன்று அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் சம்பந்தபட்ட அந்த நபரான முஜீப் முகம்மது தங்கள் அலுவலகத்தில் பணிபுரிவது உண்மை தான் எனவும் நிர்வாகத்தின் சட்டத்திட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்ட அந்த பணியாளரை பணிநீக்கம் செய்துவிட்டதாக அறிவித்துள்ளது.