ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்.! பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்.!
ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கியதாக பல பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவை அடுத்துள்ள நரசாப்புராவில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் ஐபோன் உதிரி பாகங்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில், கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறி அங்கு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
ஒருகட்டத்தில் கோபமடைந்த பணியாளர்கள் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தியதக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சேதமடைந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.437 கோடி என நிறுவனத்தின் நிர்வாக நிபுணர் குழு புகாரில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் சில பணியாளர்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்களுக்கு செல்போன்களை தயாரித்து அனுப்பும் நிறுவனம் தொழிலாளர்களை நல்ல முறையில் கண்ணியமாக நடத்தும் என்பதை உறுதி செய்வோம் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. மேலும், விசாரணைக்காக கூடுதல் குழுவை இந்தியா அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.