டிண்டர் செயலியில் பழகி தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: குற்றவாளி பிரியா உட்பட 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை.!
டிண்டர் செயலியில் பழகி தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: குற்றவாளி பிரியா உட்பட 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை.!
டிண்டரில் பழகி, தொழிலதிபரை கடத்தி ரூ.10 இலட்சம் கேட்டு கிடைக்காத காரணத்தால் கொலை செய்த விவகாரத்தில், முக்கியகுற்றவாளி பிரியா செத் (வயது 27) என்ற பெண்மணி உட்பட 3 பேருக்கு, ஜெய்ப்பூர் நீதிமன்றம் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு பிரியா செத் என்பவரால், அவரின் நண்பர் துஷ்யந்த் சர்மா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இக்குற்றத்தில் பிரியாவுக்கு உடந்தையாக இருந்த தீக்ஷந் கமரா, லக்ஷயா வாலியா ஆகியோருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்பு டிண்டர் பயன்பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டபோது, பல செல்வந்தர்கள் அதனை உபயோகம் செய்து வந்தனர். அதேபோல, விவான் கோலி என்ற போலி பெயரில், திருமணமான தொழிலதிபர் துஷ்யந்தை தனது வலையில் வீழ்த்திய பிரியா, கடத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டார். இவர் இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
முதற்கட்டமாக அவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப ரூ.3 இலட்சம் பணம் ப்ரியாவின் மகன் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் கால அவகாசம் கேட்டதால் கொடூரமாக கொலை நடந்தது. துஷ்யந்தின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டு டெல்லியில் சாலையோரம் வீசப்பட்டது.
குற்றவாளி பிரியா மற்றும் கமரா மீது ஏற்கனவே ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்ததாக 2014, 2016, 2017 ஆகிய ஆண்டுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் 2018ல் தொழிலதிபரை ஏமாற்றி, அவரின் குடும்பத்தினரை மிரட்டி பணம் பெற முயற்சித்த சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவத்தின் தோல்வியாக கொலை நடந்து, இறுதியில் மூவரும் கூட்டாளிகளாக சிக்கி இருக்கின்றனர். தற்போது அவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.