சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ..!
சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ..!
காலை நேர பணிக்கு சென்ற சி.ஐ.எஸ்.எப் படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
ஜம்முவில் உள்ள சந்தா கேம்ப் பகுதியில் இருந்து 15 சி.ஐ.எஸ்.எப் படைவீரர்கள் காலை நேர பணிக்காக சென்றுகொண்டு இருந்தனர். இவர்கள் பயணித்த பேருந்து சோதனைச்சாவடி அருகே நின்றபோது, பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை பதிவு செய்தது.
இந்நிலையில், சி.ஐ.எஸ்.எப் படை வீரர்கள் பயணித்த வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சி.சி.டி.வி காணொளியானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் விரைவில் என்கவுண்டர் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.