ஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா?அதிர்ச்சித் தகவல்.!
jee exam result - 1st 1000 ranks - tamilnadu 30 members
முன்பெல்லாம் எந்தெந்த துறைகளுக்கு ஆட்கள் தேவையோ அந்தந்த துறைக்கு ஏற்றவாறு படிப்பினை முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. பிறகு அதுவே சற்று மாறி வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு போட்டித் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்தவுடனேயே மேற்படிப்பை தொடரவே நுழைவுத் தேர்வு முறை கட்டாயம் பின்பற்றப்படுகிறது. ஏனெனில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதேசமயம் தரமான மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியே வருகிறார்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
ஏனெனில் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட தமிழகத்தில் இருந்து குறைந்த விழுக்காடு அளவில்தான் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் என்ஐடி-யில் சேருவதற்கு மாணவர்களுக்கு ஜெஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 319 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இதில் 38 ஆயிரத்து 705 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகளில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.