நடுவழியில் ரோப் கார் சேவை பாதிப்பு.. 48 பேர் உயிர் ஊசல்., ஒருவர் பலி.. மீட்பு பணியில் அதிகாரிகள்.!
நடுவழியில் ரோப் கார் சேவை பாதிப்பு.. 48 பேர் உயிர் ஊசல்., ஒருவர் பலி.. மீட்பு பணியில் அதிகாரிகள்.!
ரோப் கார் சேவை 48 பாதிக்கப்பட்டதில் பேரின் உயிர் அந்தரத்தில் ஊசலாடி வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தேவகார் மாவட்டத்தில் உள்ள மலையின் கீழிருந்து மேலே செல்ல ரோப் கார் சேவையானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் ரோப் கார் சேவை வழங்கப்பட்டு வரும்போதே, திடீரென பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ரோப்காரில் சென்றுகொண்டு இருந்தவர்கள் மற்றும் மேலிருந்து கீழே வந்தவர்கள் என அனைவரும் நடுவழியில் சிக்கிக்கொண்டனர். மொத்தமாக ரோப் காரில் 48 பேர் சிக்கியுள்ளனர். இந்த விபத்தின்போது, ஒரு பெண்மணி பலியாகிவிட்ட நிலையில், தற்போது வரை 11 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார்.
இந்திய விமான படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் நடைபெறும் வரை, ரோப் காரில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பணியும் நடக்கின்றன.