ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி மாற்றம்! புது திட்டம் பற்றிய முழு தகவல்கள் இதோ!
Jio all in one recharge plan details in tamil
தொலைத்தொடர்பு துறையில் மிக பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தி முன்னணி நிறுவனங்களை திண்டாட வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இன்டர்நெட், போன் கால், SMS என அனைத்தையும் இலவசமாக கொடுத்து வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்தது.
இதனை அடுத்து 4G அதிவேக இன்டர்நெட் பயன்படுத்த மட்டும் பணம் வசூலித்துவந்த ஜியோ தற்போது ஜியோவில் இருந்து மற்ற நெட்ஒர்க்கிற்கு செல்லும் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் புது ரீஜார்ச் திட்டங்களை அறிமுகம் செய்துள்ள ஜியோ நிறுவனம் ஆல் இன் ஒன் பேக் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
1 . Rs . 222 திட்டம்: ஒரு மாதம் வேலிடிட்டி, ஒருநாளைக்கு 2 GB அளவிலான அதிவேக டேட்டா, 100 SMS , ஜியோ டு ஜியோ இலவச கால் வசதி மற்றும் ஜியோவில் இருந்து மற்ற வாடிக்கையாளர்களை தொடர்புகொள்ள ஒரு மாதத்திற்கு 1000 நிமிடம் இலவச அழைப்புகள்.
2 . Rs . 333 திட்டம்: 222 ரூபாய் திட்டத்தில் இருக்கும் அதே 2 GB டேட்டா, 100 SMS , ஜியோ டு ஜியோ இலவச அழைப்பு மற்றும் மற்ற வாடிக்கையாளர்களை தொடர்புகொள்ள ஒரு மாதத்திற்கு 1000 நிமிடம் இலவச அழைப்புகள். இரண்டு மாதம் வேலிடிட்டி.
3 . Rs . 444 திட்டம்: திட்டம் ஓன்று மற்றும் இரண்டில் இருக்கும் அதே சலுகைகளை இந்த 444 திட்டத்தில் மூன்று மாதம் வேலிடிட்டியில் பெறலாம்.