பல்கலை., வளாகத்தில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் சடலம்: அதிர்ந்துபோன மாணவர்கள்..!
ஜே.என்.யூ வளாகத்தில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் சடலம்: போலீசார் தீவிர விசாரணை..!
டெல்லி பல்கலைக்கழக வனப்பகுதியில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுடெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வனப்பகுதியில் அங்கு பயிலும் மாணவர்கள் இருவர் நடந்து சென்றுள்ளனர். சிறிது தூரம் நடந்த பிறகு அந்த பகுதியின் அருகே துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அவர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர்.
அங்கே மரத்தில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலத்தை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இருவரும் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை ஆய்வு செய்தனர்.
மேலும், அடுத்த கட்ட விசாரணைக்காக குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். உயிரிழந்தவருக்கு 40 முதல் 45 வயதுக்குள் இருக்கலாம் என்று கூறிய காவல்துறையினர், இறந்தவர் யார் என்று இதுவரை அடையாளர் காணப்படவில்லை என்று தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் யார் என்பது குறித்தும், இந்த சம்பவம் எவ்வாறு, எப்போது நடைபெற்றது என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது, யமுனா விடுதிக்கு அருகிலுள்ள காட்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மேலும், உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் இல்லை என்று கூறியுள்ளனர்.