"கும்பமேளாவுக்கு செல்ல முடியல" 40 அடி குழி தோண்டி பெண்மணி செய்த செயலால் வியப்பு.!
கும்பமேளாவுக்கு செல்ல முடியல 40 அடி குழி தோண்டி பெண்மணி செய்த செயலால் வியப்பு.!

மகா கும்பமேளா
உத்திரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13 முதல் மகா கும்பமேளா துவங்கி நடந்து வருகிறது. இதில், கோடிக்கணக்கான பக்தர்கள் அன்றாடம் வருகை புரிந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
புனித நீராட விருப்பம்
இந்த நிலையில், கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் வசித்து வரும் கௌரி (வயது 57) என்ற பெண்ணிற்கு கும்பமேளாவில் புனித நீராட விருப்பம் ஏற்பட்டுள்ளது. பண நெருக்கடி காரணமாக இவரால் அங்கு செல்ல முடியவில்லை.
இதையும் படிங்க: கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம்; தம்பதி எடுத்த விபரீத முடிவால் சோகம்.!
40 அடி ஆழக்கிணறு
எனவே தனது வீட்டின் பின்புறத்தில் ஒரு 40 அடி ஆழக்கிணறு தோண்டி இருக்கிறார். அந்த கிணற்றில் நீர் வந்துள்ளது. இதை கங்கை நீர் தன்னுடைய வீட்டிற்கு வருவதாக அவர் நம்புகிறார். மகா சிவராத்திரி தினத்தில் இந்த நீரை கொண்டு அவர் நீராடுவார் என்று கூறப்படுகிறது.
வறுமை நிலையை நீக்காத கடவுள்
கௌரியின் வாழ்க்கை விவசாயத்தை நம்பி இருக்கிறது. இது அவரது குடும்பம் நடத்த போதுமான வருமானத்தை கொடுக்கவில்லை. இதன் காரணமாகத்தான் அவரால் கும்ப மேளாவுக்கு செல்ல முடியவில்லை. கடந்த டிசம்பர் 15ல் கிணறு தோண்ட ஆரம்பித்த கௌரி பிப்ரவரி 15ல் கிணறை கட்டி முடித்துள்ளார்.
இதையும் படிங்க: தந்தையின் சடலத்துடன் மகன் பயணம்.. சட்டென கூறிய வார்த்தை.. எழுந்த தந்தை.!