உனக்கு என்ன கள்ளக்காதல்? நல்லாதானே பார்த்துகிறேன் - பெண் அடித்து கொலை.!
உனக்கு என்ன கள்ளக்காதல்? நல்லாதானே பார்த்துகிறேன் - பெண் அடித்து கொலை.!
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணின் கள்ளக்காதல் பழக்கத்தால், இறுதியில் அவர் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், அனேகல் மடிவாளா கிராமத்தை சார்ந்தவர் மஞ்சுளா (வயது 35). இவர் கடந்த 7 வருடத்திற்கு முன்னர் தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து, பெங்களூரில் உள்ள பீரேஸ்வரா பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். மேலும், வீட்டில் பணிப்பெண்ணாகவும் வேலைபார்த்து வந்துள்ளார்.
இவருக்கு அலெக்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவருடன் நட்பு ரீதியில் பழகி வந்துள்ளார். பின்னாளில், இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், மஞ்சுளாவுக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மஞ்சுளா தனிமையில் புதிய கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இந்த விஷயத்தை அறிந்த அலெக்ஸ் மஞ்சுளாவிடம் தகராறு செய்துள்ளார். கடந்த ஜன. 7 ஆம் தேதி இருவரும் ஒன்றாக வீட்டில் மதுபானம் அருந்திய நிலையில், இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அலெக்ஸ் மஞ்சுளாவை நோக்கி, "நான் உன்னை நன்றாகத்தானே பார்த்துக்கொள்கிறேன், உனக்கு எதற்காக இன்னொருவன் தேவைப்படுகிறான்" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்து அதிகரித்த காரணத்தால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அலெக்ஸ், சுத்தியலால் மஞ்சுளாவை தாக்கியுள்ளார்.
இதனால் அவரின் தொடை எலும்பு உடைந்த நிலையில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலை வரை மஞ்சுளா எழுந்துகொள்ளாத நிலையில், அவர் மயக்கத்தில் இருப்பதாக நினைத்து அலெக்ஸ் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். அப்போது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்ய, அவரின் உடலை அங்கேயே விட்டுவிட்டு அலெக்ஸ் தப்பி சென்றுள்ளார்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பெண் யார்? அவரை விட்டுசென்றவர் யார்? எங்கிருந்து வந்தார்? என விசாரணை நடத்தி வந்தனர். ஜன. 10 ஆம் தேதி தனது சகோதரியை காணவில்லை என மஞ்சுளாவின் அண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் மஞ்சுளாவின் பிரேதத்தை காண்பிக்கையில் அவர் தனது தங்கை என்பதை உறுதி செய்துள்ளார்.
இதனையடுத்து நடந்த விசாரணையில் மேற்கூறிய தகவல் தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருந்த அலெக்ஸை தேடி வந்த காவல் துறையினர், நேற்று அவரை கைது செய்தனர்.