"படியில் நிற்காதே" - அறிவுரை கூறிய நடத்துனருக்கு கத்திக்குத்து.. பேருந்தில் அதிர்ச்சி.. பதறியோடிய பயணிகள்.!
படியில் நிற்காதே - அறிவுரை கூறிய நடத்துனருக்கு கத்திக்குத்து.. பேருந்தில் அதிர்ச்சி.. பதறியோடிய பயணிகள்.!
படியில் நிற்க வேண்டாம் என அறிவுறுத்திய நடத்துனருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில், பனசங்கரி டிடிஎம்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து, ஹோப் பார்ம் நோக்கி 500 சிகே / 13 பேருந்து சேவை, பெங்களுர் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க போலி ரைடு; அரசுப்பணியாளர்களின் திருட்டு சேட்டை அம்பலம்.. நால்வர் கைது.!
நேற்று பேருந்து ஐடிபிஎல் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, பேருந்தில் பயணம் செய்த ஹரிஷ் சின்ஹா என்பவர், படிக்கு அருகே நின்றுகொண்டு இருந்துள்ளார். அந்த பேருந்து தானியங்கு கதவு கொண்ட பேருந்து என்பதால், பயணி சின்ஹாவை நடத்துனர் யோகேஷ் படியில் இருந்து மேலே ஏறி வருமாறு கூறி இருக்கிறார்.
நடத்துனருக்கு சரமாரி கத்திக்குத்து
இதன்போது இருதரப்பு வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த பயணி ஹரிஷ் சின்ஹா, நடத்துனரை கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதனால் பதறிப்போன பயணிகள் அலறவே, உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது. பின் அங்கிருந்த மக்களால் பயணி பிடித்து காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், இளைஞர் சின்ஹா பிபிஓ ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில், அவர் சமீபத்தில் பணியை இழந்துள்ளார். இதனால் வேறு நிறுவனங்களில் வேலை தேடி அலைந்து விரக்திக்கு உள்ளாகி இருக்கிறார். இதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்துடன் அவர் பயணித்த நிலையில், நடத்துனரின் ஆலோசனை அவருக்கு ஆவேசத்தை வழங்கி கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நடத்துனர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
இதையும் படிங்க: ஓவிய ஆசிரியரின் செல்போனில் 5000+ நிர்வாண விடியோக்கள்; விசாரணையில் பரபரப்பு தகவல்.!