சரக்கடிக்க பணம் கேட்டு வற்புறுத்தல்.. மர்ம மரண வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. பரபரப்பு தகவல்.!
சரக்கடிக்க பணம் கேட்டு வற்புறுத்தல்.. மர்ம மரண வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. பரபரப்பு தகவல்.!
மதுபானம் அருந்த பணம் கேட்டு தொல்லை கொடுத்த நபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. விபத்தில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வழக்கில், பிரேத பரிசோதனை உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், கொடிகேஹள்ளி பகுதியை சார்ந்தவர் பிரதீக். இவர் தொழிலாளி ஆவார். கடந்த அக். 17 ஆம் தேதி தனலட்சுமி லே அவுட் பகுதியில், இறைச்சி கடை அருகே இரத்த வெள்ளத்தில் நின்றார். இதனைகவனித்த இறைச்சி கடை உரிமையாளர் சுரேஷ், ப்ரதீக்கின் சகோதரர் சுப்பிரமணிக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அங்கு வந்த சுப்பிரமணி, பிரதீக்கை அழைத்துச்சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தார்.
விபத்து ஏற்பட்டு நான் கீழே விழுந்துவிட்டேன், இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது என பிரதீக் தனது சகோதரர் சுப்பிரமணியிடம் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதி செய்யப்பட்ட பிரதீக், வீட்டிற்கு வந்ததும் திடீரென உயிரிழந்தார். பிரதீக் விபத்து காயம் என்று கூறியதால், எலகங்கா காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
ப்ரதீக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரதீக் தலையில் ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர் என்ற முடிவு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, வழக்கு விசாரணை கொடிகேஹள்ளி காவல் துறையினருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
கொடிகேஹள்ளி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இறைச்சி கடை உரிமையாளர் சுரேஷ் சந்தேக வளையத்தில் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. சுரேஷிடம் நடந்த விசாரணையில், "சுரேஷ் இறைச்சி கடைக்கு கடந்த அக். 17 ஆம் தேதி பிரதீக் சென்றுள்ளார். இதன்போது, சுரேஷின் கடையில் பணியாற்றி வந்த கேரளாவை சார்ந்த சமீன் (வயது 28) என்பவர் இருந்துள்ளார்.
ஏற்கனவே மதுபானம் அருந்தியிருந்த பிரதீக், மேலும் மதுபானம் அருந்த ரூ.100 கேட்டு சமீனுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சமீன் கடையில் இருந்த ஆயுதத்தை எடுத்து பிரதீக்கை தாக்கி இருக்கிறார். இதன் பின்னரே ப்ரதீக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த சுரேஷ், சமீன் தாக்கியது தொடர்பாக கூற வேண்டாம் என ப்ரதீக்கிடம் தெரிய்வத்துள்ளார்.
ப்ரதீக்கும் மருத்துவர் மற்றும் சகோதரர் சுப்பிரமணியத்திடம் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். பிரதீக் மறைந்த தகவலை அறிந்த சமீனும் தலைமறைவாகியுள்ளார். சுரேஷும் எந்த தகவலையும் கூறாமல் இருந்த நிலையில், பிரேத பரிசோதனையில் உண்மை அம்பலமானது. விசாரணைக்கு பின்னர் சமீனை கைது செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்தனர்.
பிரதீக் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அறிவுறுத்தியும், அதனை கண்டுகொள்ளாது வீட்டிற்கு சென்றுள்ளார். அதனாலேயே மரணம் ஏற்பட்டுள்ளது.