ஜாதி இருந்தால் மனிதராக வாழ முடியாது.. சுயமரியாதைக்காரனாக வாழ வேண்டும் - சித்தராமையா.!
ஜாதி இருந்தால் மனிதராக வாழ முடியாது.. சுயமரியாதைக்காரனாக வாழ வேண்டும் - சித்தராமையா.!
செய்யும் தொழிலை ஜாதியாக மாற்றி, நீ மேல் ஜாதி, அவன் கீழ் ஜாதி என்று பிரித்து வைத்துள்ளார்கள். பலவகை தொழிலால் மட்டுமே மனித சமூகம் வாழும் என சித்தராமையா பேசினார்.
கர்நாடக சவிதா சமூகம் சார்பாக "நான் சுயமரியாதைக்காரன்" என்ற புத்தக வெளியீட்டு விழா பெங்களூரு நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "கர்நாடக மாநிலத்தில் 12 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஜாதிகளை ஒலிக்க பசவண்ணர் பாடுபட்டார். சாதிகள் புரையோடி இருக்கும் தீண்டாமையை நான் கண்டிக்கிறேன். நோயாளிக்கு சிகிச்சையின் போது மருத்துவர்கள் உறவினர் அல்லது உங்களது குடும்பத்தினர் இரத்தம் வேண்டும் என்று கேட்பது இல்லை. இரத்தம் கொடுத்தவர் எந்த ஜாதி என்று கேட்பது இல்லை. உயிர்பிழைத்த பின்னர் ஜாதி குறித்து பேசுகிறோம்.
ஜாதிகள் இருக்கும் வரையில் நாம் மனிதராக வாழ இயலாது. அது மிகவும் கடினமானது. செய்யும் தொழிலை ஜாதியாக மாற்றி, நீ மேல் ஜாதி, அவன் கீழ் ஜாதி என்று பிரித்து வைத்துள்ளார்கள். பலவகை தொழிலால் மட்டுமே மனித சமூகம் வாழும். ஜாதிகளில் மேலானதும் இல்லை, கீழானதும் இல்லை. மூடநம்பிக்கையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அனைவருக்கும் தலைசிறந்த கல்வி கிடைக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் 78 % பேர் கல்வி அறிவுள்ளவர்களாக உள்ளார்கள். அப்போதும், ஜாதிகள் குறையவில்லை. படித்தவர்களால் அதிக ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. சுயமரியாதை உள்ளவர்களாக ஒவ்வொருவரும் வாழ வேண்டும். மருத்துவராக, பொறியாளராக உருவாக வேண்டும்" என்று பேசினார்.