சில வினாடியில் மரணம் வர போகுதுனு அப்போ தெரியல!! மகிழ்ச்சியாக இருந்த மணப்பெண் மூளைச்சாவு ஏற்பட்டு மரணம்..
சில வினாடியில் மரணம் வர போகுதுனு அப்போ தெரியல!! மகிழ்ச்சியாக இருந்த மணப்பெண் மூளைச்சாவு ஏற்பட்டு மரணம்..
திருமண வரவேற்பின்போது மணமகள் மூளைச்சாவு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கோலார் அடுத்த சீனிவாசப்பூரைச் சேர்ந்த சைத்ரா என்ற பெண்ணிற்கு கடந்த 7ஆம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு முந்தையநாள் மாலை மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. வரவேற்பு நிகழ்ச்சியின்போது உறவினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு சென்ற மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவந்தனர்.
இந்நிலையியல் மணமகள் சைத்ரா திடீரென மேடையில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மணமகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மணமகளை சோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சைத்ராவின் பெற்றோர், மருத்துவமனையிலையே கதறி அழுதனர். மேலும், தங்கள் மகள் இறந்த சோகத்தையும் தாங்கிக்கொண்டு, அவரது உடல் உறுப்புக்களை தானமாக வழங்கியுள்ளனர். திருமண நாளுக்கு முதல் நாள் மணமகள் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.