கோழிக்குஞ்சின் உயிரை காப்பாற்ற எண்ணி, கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் பரிதாப பலி.. கண்ணீர் சோகம்.!
கோழிக்குஞ்சின் உயிரை காப்பாற்ற எண்ணி, கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் பரிதாப பலி.. கண்ணீர் சோகம்.!
வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கோழிக்குஞ்சின் உயிரை காப்பாற்ற எண்ணிய இளைஞர், கிணற்றில் தவறி விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்க்ஷிண கன்னடா மாவட்டம், பண்ட்வால் கவுரப்பாடி கிராமத்த்தில் வசித்து வருபவர் வசந்த் முகேரா (வயது 35). இவர் கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம், உப்பலா மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்த்து வருகிறார்.
நேற்று முன்தினத்தில் வசந்த் முகேரா சொந்த ஊருக்கு வருகை தந்திருந்த நிலையில், அவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கோழிக்குஞ்சு கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு துடிதுடித்துள்ளது. இதனைக்கண்ட வசந்த கோழிக்குஞ்சை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
இதற்காக கிணற்றில் இறங்கிய நிலையில், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கிணற்றில் நீர் இல்லாத காரணத்தால், அடியில் இறந்த பாறையில் மோதி அவரின் உயிர் பறிபோயுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.