3 மாதத்தில் 1 ஆண்டுக்கான தண்ணீர், கர்நாடக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் தமிழகத்தில் ஏற்படப்போகும் மாற்றம்.!
3 மாதத்தில் 1 ஆண்டுக்கான தண்ணீர், கர்நாடக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் தமிழகத்தில் ஏற்படப்போகும் மாற்றம்.!
தமிழகத்துக்கு காவிரியில் இருந்து ஒரு ஆண்டுக்கு தரவேண்டிய தண்ணீரை மூன்று மாதத்தில் தந்துவிட்டோம் எனவே இனி மேகதாது பகுதியில் அணை கட்ட தமிழகம் அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை எழுப்பியுள்ளது.
ஒரு ஆண்டுக்கு காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 177.3 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.மேலும் ஜூன் முதல் மே மாதம் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 310.6 எம் சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஆண்டுக்கு தர வேண்டிய தண்ணீரை விட கூடுதலாக 133.3 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்கியுள்ளது.
அதாவது ஜூன் மாதத்தில் 9.2 டிஎம்சி,ஜூலை மாதத்தில் 36.9 டிஎம்சி,ஆகஸ்ட் மாதத்தில் 46.1 டிஎம்சி என இந்த மூன்று மாதங்களில் கர்நாடகா திறந்துவிட வேண்டியது 87.3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே.
ஆனால் கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்பட்ட 250 டிஎம்சி உபரிநீர் வேளாண் உற்பத்திக்கு பயன்படுத்த முடியாமல், வீணாக நேரடியாக கடலில் கடலில் சென்று சேர்ந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட வேண்டும்.இதற்கு தமிழகம் அனுமதிக்க வேண்டும் என கர்நாடக அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் இதனால் 67 டிஎம்சி தண்ணீரை சேகரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய கர்நாடக நீர்பாசனத்துறை முதன்மை செயலாளர் ராஜேஷ் கூறியதாவது, இந்த ஆண்டு கனமழையின் காரணமாக காவிரி நீரானது அதிக அளவில் வீணானது.
மேலும் இது எதிர்காலத்திலும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவே மேகதாது அருகே அணைகள் கட்டப்பட்டால் அதன் மூலம் உபரி நீர் தேக்கி வைக்கப்பட்டு பெங்களூர் குடிநீர் தேவைக்கும்,மின்சார உற்பத்திக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும் தமிழகமும் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழகமோ மேகதாது அருகே அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றது.