திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த 23 வயது பள்ளி ஆசிரியை பட்டப்பகலில் கடத்தல்: துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்..!
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த 23 வயது பள்ளி ஆசிரியை பட்டப்பகலில் கடத்தல்: துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்..!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன், பிட்டகவுடனஹள்ளி பகுதியில் வசித்து வரும் 23 வயதுடைய பெண்மணி அர்பிதா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல தனது வேலைக்கு பெண்மணி புறப்பட்டு சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம், அவரை கும்பல் ஒன்று காரில் கடத்திச்சென்றது. இந்த தகவலை அறிந்த பெண்ணின் தாய், காவல் நிலையத்தில் ராமு என்பவருக்கு எதிராக புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், "கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமு என்பவர் எனது மகளை பெண்கேட்டார். நாங்கள் அவருக்கு பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்தோம். அந்த ஆத்திரத்தில் மகளை கடத்தி சென்றுள்ளார்" என தெரிவித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக தனிப்படை அமைத்து ராமு மற்றும் அவரது கூட்டாளிகளின் செல்போன் நம்பர் வைத்து தேடினர். அவர்கள் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள நெல்யாடி பகுதியில் இருப்பது தெரியவந்தது. அவரை அதிகாரிகள் விரைந்து சென்று கைது செய்தனர்.
விசாரணையில், திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் பெண்ணை கடத்தி திருமணம் செய்ய ராமு முயற்சித்தது அம்பலமானது. இதனையடுத்து, அதிகாரிகள் அவருக்கு எதிராக வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது கூட்டாளிகளும் கம்பி எண்ணி வருகிறார்கள்.