சண்டையில் அந்தரங்க உறுப்பை அழுத்தினால் கொலை முயற்சி இல்லை - உயர்நீதிமன்றம் பரபர தீர்ப்பு..!!
சண்டையில் அந்தரங்க உறுப்பை அழுத்தினால் கொலை முயற்சி இல்லை - உயர்நீதிமன்றம் பரபர தீர்ப்பு..!!
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓம்காரப்பா மற்றும் பரமேஸ்வரா என்ற இரண்டு நபர்களுக்கு இடையே எழுந்த தகராறில், ஓம்காரப்பாவின் விதைப்பையை பரமேஸ்வரா அழுத்தியுள்ளார்.
இதனால் கடுமையான உடல்நல பிரச்சனைக்கு உள்ளாகிய ஓம்காரப்பாவின் விதைப்பையை எடுக்கும் அளவு உடல்நிலை மோசமாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு, பரமேஸ்வராவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த பரமேஸ்வரப்பா, தன் மீதான கொலை வழக்குப்பதிவை இரத்து செய்ய வேண்டும் என கூறினார். இந்த மனுவை விசாரணை செய்த கர்நாடக மாநில உயர்நீதிமன்றம், சண்டையில் அந்தரங்க உறுப்பை அழுத்துவது கொலை முயற்சியில் இடம்பெறாது. அதனை கொலை முயற்சியாக கருத இயலாது என தீர்ப்பளித்துள்ளது.