மனைவியை விவாகரத்து செய்த கணவனுக்கு, நீதிமன்றம் விதித்த ஆப்பு உத்தரவு.. அதிரடி தீர்ப்பு.!
மனைவியை விவாகரத்து செய்த கணவனுக்கு, நீதிமன்றம் விதித்த ஆப்பு உத்தரவு.. அதிரடி தீர்ப்பு.!
தனது மனைவியை விவாகரத்து செய்த கணவர், இரண்டாவது திருமணம் செய்து முதல் மனைவியின் குழந்தையை நான் வளர்ப்பேன் என உரிமை கொண்டாட, நீதிமன்றம் அவருக்கு எதிராக பரபரப்பு தீர்ப்பளித்து அபராதம் விதித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சார்ந்தவர் முஸ்தாக். கடந்த 2009 ஆம் வருடம் ஏப்ரல் 30 ஆம் தேதி, முஸ்தாக்குக்கும் - தாவணகெரே மாவட்டத்தை சார்ந்த ஆயிஷா என்ற பெண்மணிக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. முஸ்தாக் கம்பியூட்டர் என்ஜினியராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ள நிலையில், தம்பதியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் இருவரும் விவாகரத்து கோரி பெங்களூர் குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், பெண்மணி கணவர் தன்னிடம் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி மானநஷ்ட வழக்கு மற்றும் ஜீவானம்சம் கேட்டு மனுதாக்கல் செய்தார். குழந்தையை தானே வளர்ப்பேன் என்றும் ஆயிஷா தெரிவித்து இருந்தார்.
முஸ்தாக் விவாகரத்துக்கு பின்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், முதல் மனைவி ஆயிஷாவுக்கு பிறந்த குழந்தை தன்னிடம் இருக்க வேண்டும் என முஸ்தாக் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பெற்ற தாயுடன் குழந்தை வளர்வது தான் சட்டப்படி சரியானது என தீர்ப்பளித்தார்.
மனைவியை விட்டு பிரிந்து சென்ற கணவர் இரண்டாவது திருமணம் செய்துள்ள நிலையில், வளர்ப்பு தாயுடன் குழந்தை வளர்வதை விட பெற்ற தாயுடன் வளர்வதே நல்லது. மனுதாரர் முஸ்தாக்கின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் பொருட்டு மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ள காரணத்தால், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த தொகையை முஸ்தாக் முதல் மனைவியிடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, இழப்பீடு கொடுக்க தவறினால் குழந்தை பார்க்க வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான அனுமதி இரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.