மச்சினிச்சியுடன் கள்ளக்காதல்.. தட்டிக்கேட்ட மனைவி துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை.. கணவன் வெறிச்செயல்.!
மச்சினிச்சியுடன் கள்ளக்காதல்.. தட்டிக்கேட்ட மனைவி துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை.. கணவன் வெறிச்செயல்.!
மச்சினிச்சியுடன் கணவன் கள்ளதொடர்பு வைத்திருந்ததால், தட்டிக்கேட்ட மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு புறநகர் மாவட்டம், புவனேஸ்வரி நகர் பகுதியில் வசித்து வருபவர் சவுடேஸ். இவர் மதுபான விடுதியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்வேதா (வயது 30). தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கணவன் மற்றும் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், ஸ்வேதாவை சரமாரியாக அடித்து, உதைத்து தாக்கியதுடன் அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதன்பின்னர் உடல்நலக்குறைவால் ஸ்வேதா உயிரிழந்து விட்டதாக அவர் நாடகமாடிய நிலையில், காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரியவந்துள்ளது.
இந்த தகவலின் பேரில் நெலமங்களா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஸ்வேதாவின் தங்கையுடன் சவுடேஸ்க்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், இது குறித்து அறிந்த ஸ்வேதா தனது கணவரை கண்டித்த நிலையில், அவர் ஸ்வேதாவை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.