அடுத்தடுத்து தூக்கில் தொங்கிய காதல் ஜோடி.. பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்தும் நேர்ந்த துயரம்.!
அடுத்தடுத்து தூக்கில் தொங்கிய காதல் ஜோடி.. பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்தும் நேர்ந்த துயரம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டம், மண்டக்கள்ளி பகுதியில் வசித்து வருபவர் மோனிகா (வயது 20). அதே பகுதியில் உள்ள வீட்டில், இவர் வேலை செய்து வந்துள்ளார். அங்குள்ள ஜோதி நகர் பகுதியில் வசித்து வரும் இளைஞர் மனு (வயது 20). இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நட்பாக தொடங்கிய இவர்களின் பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் தங்களின் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு பேசி வந்துள்ளனர். இதனிடையே, மோனிகா தனது காதலை பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர். மனுவின் வீட்டிலும் பெற்றோர் திருமணத்திற்கு பச்சைக்கொடி காண்பித்துள்ளார்.
சிறிய பிரச்சனையில் உயிரை மாய்த்துக்கொண்ட காதல் ஜோடி
இதனால் எந்த பிரச்சனையும் இன்றி காதல் ஜோடியின் திருமணம் விரைவில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசியுடன் நடக்கவிருந்துள்ளது. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு காதல் ஜோடியிடையே சிறிய அளவிலான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசவில்லை. மோனிகா சம்பவத்தன்று மனுவுக்கு தொடர்புகொண்டுள்ளார்.
இதையும் படிங்க: 3 வயது சிறுவனை சீரழித்த 55 வயது ஆசிரியை; நர்சரி பள்ளியில் நடந்த பகீர் செயல்.!
ஆனால், மனு அழைப்பை எடுக்கவில்லை. வேதனையடைந்த மோனிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இந்த விஷயம் குறித்து காதலர் மனுவுக்கும் தகவல் தெரியவந்த நிலையில், அவரும் தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். மகன் காதலி இறந்த சோகத்தில் ஏதேனும் விபரீத முடிவு எடுக்கக்கூடாது என அவர்கள் தேடியபோதே சோகம் நடந்துள்ளது.
இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு... தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி.!!