சோறுபோட்ட முதலாளி மனைவியை நகைக்காக கொலை செய்த பயங்கரம்.. காதை அறுத்து கொடூரம்.. கர்நாடகாவில் தமிழர் கைது.!
சோறுபோட்ட முதலாளி மனைவியை நகைக்காக கொலை செய்த பயங்கரம்.. காதை அறுத்து கொடூரம்.. கர்நாடகாவில் தமிழர் கைது.!
தமிழகத்தில் இருந்து வேலைக்காக கர்நாடக சென்ற தொழிலாளி, நகைக்காக முதலாளியின் மனைவியை கொலை செய்து காதை அறுத்து சென்ற பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகர் மாவட்டம், தாவரகரே கிராமத்தில் வசித்து வருபவர் அனுமந்தையா. இவர் தனக்கு சொந்தமான விவசாய தோட்ட வீட்டில் வசித்து வருகிறார். அனுமந்தையாவின் மனைவி ஜெயம்மா (வயது 67). தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில், அனைவரும் பெங்களூரில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் தம்பதி இருவரும் தனியே வசித்து வரும் நிலையில், மார்ச் 13 ஆம் தேதி அனுமந்தையா வெளியே சென்றிருந்தார்.
அந்த சமயத்தில், வீட்டில் தனியே இருந்த ஜெயம்மா கொலை செய்யப்பட்டு, அவரின் நகை மற்றும் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி தமிழகத்தை சார்ந்த கூலித்தொழிலாளி சூர்யா (வயது 28) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடந்த விசாரணையில், அனுமந்தையாவுக்கு சொந்தமான தோட்டத்தில் கோழிப்பண்ணையும் உள்ளது. கோழிப்பண்ணையில் சூர்யா வேலை பார்த்து வந்துள்ளார். தம்பதி தனியே வசிப்பதை தெரிந்துகொண்ட சூர்யா, நகை மற்றும் பணம் இருக்கும் விபரத்தையும் அறிந்துகொண்டார். இதற்காக திட்டமிட்டு வேளையில் இருந்தும் நின்றுள்ளார். பின்னர், சம்பவத்தன்று அனுமந்தையா வெளியே சென்றதை உறுதி செய்துள்ளார்.
ஜெயம்மா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை உறுதி செய்து, அவரை சந்தித்து வருவது போல சென்று சோறுபோட்ட முதலாளியின் மனைவியை கொலை செய்து நகையை கொள்ளையடித்து சென்றது உறுதியானது. ஜெயம்மாவின் கழுத்தில் இருந்த கம்மலை கழற்ற இயலாமல், காதோடு அறுத்து சென்ற சோகமும் நடந்துள்ளது. சூர்யாவின் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.