52 ஆயிரத்துக்கு மதுபாட்டில்கள் வாங்கிய குடிமகன்.! மீண்டும் மதுக்கடைகளை திறந்தநிலையில் கர்நாடகாவில் நடந்த சம்பவம்.!
Karnataka tasmac 52 thousand bill for one person news goes viral
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கின் காரணமாக நாடுமுழுவதும் உள்ள அனைத்து மது கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், நேற்று முதல் 3-ம் கட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கபடுவதால், மால்கள் இல்லாமல் தனி கட்டடத்தில் இயங்கு மது கடைகளுக்கு அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டது.
அதன்படி நேற்று காலை 9 மணி முதல் மது விற்பனை தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்குப் பிறகு கர்நாடகாவில் மது கடைகள் திறக்கப்பட்டு மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த குடிமகன் ஒருவர் 52 ஆயிரத்து 841 ரூபாய்க்கு மதுபாட்டில்கள் வாங்கியுள்ள பில் ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. யாரு சாமி அவன்? என்பதுபோல் ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.