கடன் தொல்லையால் PWD காண்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை.. அரசு அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!
கடன் தொல்லையால் PWD காண்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை.. அரசு அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!
அரசு அதிகாரிகள் பணி முடித்த செயல்களுக்கு பணம் கொடுக்க தாத்தாமாக்கியதால் வீட்டை விட்டு சிறு கடனை அடைத்த ஒப்பந்ததாரர், தனது உயிரை தூக்கிட்டு மாய்த்துக்கொண்டார்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் டி.என் பிரசாத் (வயது 53). இவர் நேற்று இரவில் தேவராயனதுர்கா விருந்தினர் மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை மீட்ட காயத் சந்திரா காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரசாத் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், "எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. எனது நண்பர்களுக்கு தகவலை தெரியப்படுத்துங்கள். அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கூறியுள்ளார்.
பிரசாத்தின் தற்கொலை குறித்து அவர்களின் நண்பர்கள் தெரிவிக்கையில், பிரசாத் பணி செய்து முடித்த வேலைக்கான பில்கள் அரசால் வழங்கப்படவில்லை. அவை நீண்ட காலமாக நிலுவையில் இருந்த காரணத்தால், அவற்றுக்கு முதலீடு செய்ய பிரசாத் வாங்கிய கடன் தொகை அதிகரித்துள்ளது.
தனது கடனை செலுத்த ஒருகட்டத்தில் பிரசாத் தனது புதிய வீட்டை 2 மாதங்களுக்கு முன் விற்பனை செய்துவிட்டார். அவரது கடனால் பிரசாத் தற்கொலை செய்துகொண்டார். அரசுத்துறையில் இருக்கும் பொறுப்பற்ற தன்மை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம். அவர் தற்கொலை செய்ய அவரின் கடன்கள் காரணம்" என தெரிவித்தார்.