நிற்காமல் சென்ற பேருந்தின் கண்ணாடியை பதம்பார்த்த பெண்மணி; பேருந்து ஓட்டுனரின் தரமான செயல்.!
நிற்காமல் சென்ற பேருந்தின் கண்ணாடியை பதம்பார்த்த பெண்மணி; பேருந்து ஓட்டுனரின் தரமான செயல்.!
KSRTC BUS FILE PIC
நொடிபொழுது ஆத்திரம் பெண்ணின் ரூ.5 ஆயிரம் பணத்தை அபராதமாக செலுத்த செய்துவிட்டது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள இல்கல் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி. கோப்பில் மாவட்டத்தில் உள்ள ஹீலிகி பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சென்றுள்ளார்.
பின்னர், அங்கிருந்து சொந்த ஊர் திரும்ப பேருந்துக்கு காத்திருந்துள்ளார். அந்த சமயத்தில், கொப்பல் - ஹோஸ்பேட் செல்லும் அதிவேக பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி பேருந்தின் கண்ணாடியை உடைத்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து லட்சுமியை அதே பேருந்தில் ஏற்றிய ஓட்டுநர், முனிபர்த் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனது செயலுக்கு பெண்மை மன்னிப்பு கோரினார். இதனையடுத்து, அவருக்கு அபராதமாக ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்திய பெண்மணி பணத்தை செலுத்திவிட்டு தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.