பிக் பிரேக்கிங்: இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிகிறது ஜம்மு-காஷ்மீர்: மத்திய அரசு அதிரடி முடிவு!
Kashmir splited into two union pradesham
இந்தியா - பாகிஸ்தான் இடையே பல வருடமாக நடந்துவரும் பிரச்சனைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது காஷ்மீர் விவகாரம். இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு எடுக்க இருப்பதாகவும், காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய போவதாகவும் சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியது.
இதனை அடுத்து கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசு படிப்படியாக ராணுவத்தை குவித்து வந்தது. மேலும், இன்று காலை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று முடிவடைந்தது.
இந்த கூட்டத்தில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஏ-ஐ ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரேதசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரேதசமாகவும் பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.