தவமிருந்து பெற்ற மகனின் திடீர் மரணம்! ஒவ்வொரு பிறந்தநாளிலும் பெற்றோர் செய்யும் நெகிழ்ச்சி காரியம்!
Kerala family did marriage for 7 girls
கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 7 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்னனர். இந்நிலையில் பல்வேறு பிரார்த்தனை, மருத்துவம் இவற்றையெல்லாம் கடந்து 7 வருடங்களுக்கு பிறகு இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
7 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை தனது 7 வது வயதில் திடீரென இறந்துள்ளது. இதனால் சோகத்தின் உச்சிக்கே சென்ற பெற்றோர் தங்கள் மகனின் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் ஏதவாது ஒரு நல்ல காரியம் செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்னனர்.
அதன்படி சமீபாத்தில் அவர்கள் மகனின் 20 வது பிறந்த நாளை கொண்டாடியுள்னனர். அந்த பிறந்த நாள் அன்று 7 ஏழை இளம் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்னனர் அந்த தம்பதியினர். மேலும், 2000 பேருக்கு உணவும் வழங்கியுள்னனர்.