×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.! பிணங்களின் மூலம் 3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய கேரளா அரசு.! அதிர்ச்சி அளிக்கும் தகவல்.!

அடேங்கப்பா..! பிணங்களின் மூலம் 3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய கேரளா அரசு.! அதிர்ச்சி அளிக்கும் தகவல்.!

Advertisement

இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கும் கேரளா முன்னோடியாக விளங்கி வருகிறது. தற்போது அந்த மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு விஷயம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

கேரள மாநிலம் இறந்த பிணங்களின் மூலம் 3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிருக்கிறது. இது பல்வேறு மாநிலங்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது . கேரள மாநில அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் நீண்ட நாட்களாக கிடந்த இடங்களை விற்பனை செய்ததன் மூலம் இந்த வருவாயை கேரளா அரசு ஈட்டி இருக்கிறது.

 2008 ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனை பிணவறைகளில் கேட்பாரற்று கிடக்கும் பிணங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு விற்பனை செய்துதான் மூலம் கேரளா அரசுக்கு இந்த வருவாய் கிடைத்திருக்கிறது. பிணவறைகளில் கேட்பார் இன்றி  கிடக்கும் பிணங்களை தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயிற்சி செய்வதற்காக அந்தக் கல்லூரிகளுக்கு விற்று இருக்கிறது கேரளா அரசு.

இதுவரை 1,122 சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு விற்பனை செய்ததன் மூலம் 3.66 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட பிணங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் எனவும் பதப்படுத்தப்படாத பிணங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் எனவும் கேரளா அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #KERALA #dead bodies #Kerala Govt #3 crore revenue
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story