நாடே அதிர்ச்சி..! 14 வயது சிறுவனால் 20 சிறுமிகள் பலாத்காரம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.. போதைக்கு அடிமையான பரிதாபம்.!
நாடே அதிர்ச்சி..! 14 வயது சிறுவனால் 20 சிறுமிகள் பலாத்காரம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.. போதைக்கு அடிமையான பரிதாபம்.!
இந்தியாவின் சொர்க்க பூமி என்று போற்றப்படும் மாநிலத்தில் 14 வயது சிறுவனால் 20 சிறுமிகள் போதைக்கு அடிமையாக்கப்பட்டு மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், வெளிமாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்துள்ளார். மாணவியுடன் வகுப்பில் பயின்று வரும் 14 வயது சிறுவன் சிறுமியுடன் பழகி வந்த நிலையில், அவ்வப்போது நட்பு அறிமுகத்தில் மாணவியின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளார்.
இதனால் சிறுமியின் பெற்றோரிடம் நன்மதிப்பை பெற்ற நிலையில், மாணவி தனது பழைய பள்ளியின் நண்பர்களை பிரிந்து வந்த காரணத்தால் சோகத்துடன் காணப்பட்டுள்ளார். இதனை தனக்கு சாதகமாக்கிய காமுகன் சிறுமியை போதை பொருளுக்கு அடிமையாக்கி இருக்கிறான்.
மேலும், போதை பொருளை உட்கொண்டால் மனதளவில் உற்சாகம் கிடைக்கும் என்று கதையளக்க, அதனை உபயோகம் செய்த சிறுமியும் போதைக்கு அடிமையாகி அது இல்லாமல் உறங்க இயலாது, உட்கார இயலாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் சிறுமியை 14 வயது காம கொடூரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். போதை பொருளை சிறுமி கேட்க, பலாத்காரம் அதற்கு வழி என்று என்று கயவன் கொடூரத்தை நிகழ்த்தி வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளான். சிறுமியின் பெற்றோர் எதற்ச்சையாக மகளின் செல்போனை பார்க்கையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ இருந்துள்ளது.
அவர் போதையில் இருப்பதும் உறுதியானதால் பெற்றோர் மகளை போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதி செய்துள்ளனர். 2 வார சிகிச்சைக்கு பின்னர் நடந்ததை கேட்டறிந்து துடித்துப்போன பெற்றோர், கண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மாணவன் சிறுமியை போல 20 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு போதைப்பொருளை பழக்கப்படுத்தி பலாத்காரம் செய்தது அம்பலமானது. 14 வயது சிறுவனின் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனை கைது செய்தனர்.
ஆனால், சிறுவனின் தரப்பில் இருந்து நீதிமன்றத்தை நாடி ஜாமின் பெறப்பட்ட காரணத்தால், சிறுவனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பலோடு சிறுவனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் விசாரணை தொடர்கிறது.