கொச்சி மாடல் அழகிகள் விபத்தில் இறந்த வழக்கில் பேரதிர்ச்சி திருப்பம்.. அடுத்தடுத்த கைதுகள், பகீர் தகவல்கள்.!
கொச்சி மாடல் அழகிகள் விபத்தில் இறந்த வழக்கில் பேரதிர்ச்சி திருப்பம்.. அடுத்தடுத்த கைதுகள், பகீர் தகவல்கள்.!
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியை சார்ந்தவர் மாடல் அழகி அன்ஷி கபீர் (வயது 23). இவரது தோழி மாடல் அழகி, ஆயுர்வேத மருத்துவர் அஞ்சனா சாஜன் (வயது 26). இவர்கள் இரண்டு பேரும், மேலும் இருவருடன் கடந்த 1 ஆம் தேதி கொச்சி அருகே நள்ளிரவில் காரில் பயணம் செய்தனர்.
இதன்போது, குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திரும்புகையில் ஏற்பட்ட விபத்தில் அன்ஷி கபீர் மற்றும் அஞ்சனா சாஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், ஒரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதுகுறித்து கொச்சி காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
விபத்து நடந்த பகுதி அருகே இருக்கும் உணவகத்தின் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை அழித்ததாக, தனியார் உணவக அதிபர் மற்றும் ஊழியர்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். விபத்து நடைபெற்ற இடத்தில் மாடல் அழகிகளின் காரை சொகுசு காரில் துரத்தி வந்ததாக ஓட்டுநர் சாஜித் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் விசாரணைக்கு பயந்து தலைமறைவாக இருந்த நிலையில், கொச்சி குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். அவருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மனும் வழங்கப்பட்டு இருந்தது. இவர்கள் அனைவரும் எதோ ஒரு உள்நோக்கத்துடன் மாடல் அழகிகளின் காரை துரத்தி சென்ற நிலையில், அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.