×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேர்க்கடலை வியாபாரம்..! 15 லட்சம் கடன்..! ஒரே நாளில் தலைகீழாக மாறிய வாழ்க்கை..!

Kerala man wins lottery

Advertisement

கேரள மாநிலம் இருட்டி பகுதியைச் சேர்ந்தவர் சமீர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். வறுமையில் வாடும் சமீர் இருட்டி பகுதியில் வேர்க்கடலை வறுத்து வியாபாரம் செய்துவருகிறார். சமீரின் கடைக்கு அருகில் காய்கறி கடையோடு சேர்த்து லாட்டரி சீட்டு விற்பனையும் செய்யும் கடை ஒன்றும் இயங்கி வந்துள்ளது.

அந்த கட்டத்தில் கடந்த 12 வருடங்களாக லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார் சமீர். ஆனால், ஒருமுறை கூட அவருக்கு லாட்டரி அடித்தது இல்லை. இந்நிலையில் சமீபத்தில் தனக்கு 3 லாட்டரி சீட்டுகளை எடுத்து வைக்கும் படி லாட்டரி சீட்டு கடைக்காரரிடம் சமீர் கூறியுள்ளார்.

அந்த கடைக்காரரும் சமீர் பெயரில் மூன்று லாட்டரி சீட்டுகளை எடுத்து வைத்துள்ளார். லாட்டரி குழுக்கள் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சமீருக்காக எடுத்துவைக்கப்பட்ட ஒரு லாட்டரி சீட்டுக்கு ரூ.60 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.

சமீருக்கு பரிசு விழுந்ததை கடைக்காரர் சமீரிடம் கூறியுள்ளார். இன்ப வெள்ளத்தில் மூழ்கி போன சமீர் சமீபத்தில்தான் ரூ.15 லட்சம் கடன் பெற்று வீடு கட்டினேன். அந்த கடனை எப்படி அடைக்கப் போகிறேன் எனச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் லாட்டரியில் கிடைத்த பணம் மூலம் நான் வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவேன் என்றும், எனது 3 பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mysteries #myths
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story